முகப்பு
செய்திகள்

தயாரிப்பாளராகும் எச். வினோத்!

எச். வினோத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்குகிறாராம்...

Updated On : 25 ஜூன், 2025 at 5:53 PM
எச். வினோத்
பகிர்:

இயக்குநர் எச். வினோத் தயாரிப்பாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தீரன் படத்தால் பிரபலமடைந்தவர் எச். வினோத். அதனைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்தார்.

தற்போது, நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

இந்த நிலையில், எச். வினோத் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் படத்தை ‘மகளிர் மட்டும்’ மற்றும் சுழல் இணையத் தொடரை இயக்கிய பிரம்மா இயக்கவுள்ளதாகவும் இதனை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோருடன் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.