இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் மருமகள் மற்றும் மூன்று முடிச்சு தொடர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. எதிர்நீச்சல் தொடரை அய்யனார் துணை சீரியல் முந்தியுள்ளது.
சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
அந்தவகையில், தொடர்களின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.
மருமகள் மற்றும் மூன்று முடிச்சு தொடர்கள் 9.80 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
சிங்கப் பெண்ணே தொடர் 9.63 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் கயல் தொடர் 9.27 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை தொடர்கள் முறையே 7.87, 7.62 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம், ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளன.
எதிர்நீச்சல் தொடர் 7.50 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது. அன்னம் தொடர் 7.49 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர் 6.87 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று எட்டாவது இடத்தையும் சின்ன மருமகள் தொடர் 6.72 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடர் 6.04 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று பத்தாம் இடத்தில் உள்ளது.
The series marumagal and mundru mudichu topped the TRP ratings this week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.