அமைச்சர் அன்பில் மகேஸ். 
செய்திகள்

அமைச்சர் அன்பில் மகேஸ் நடித்த தொடர் எது தெரியுமா?

அமைச்சர் அன்பில் மகேஸ் நடித்த தொடர் குறித்து....

DIN

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அகல்யா என்ற தமிழ் தொடரில் நடித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் குருவி படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இவரைப்போலவே அவரது தந்தையும் முதல்வருமான ஸ்டாலினும் சினிமா, சீரியல் என நடித்துவிட்டு, பின்னர் அரசியலில் ஈடுபட்டு தற்போது முதல்வராக உள்ளார்.

நடிகரும் துணை முதல்வருமான உதயநிதியின் நெருங்கிய நண்பரான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் சன் தொலைக்காட்சியில் 2004 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அகல்யா தொடரில் நடித்துள்ளார். இத்தொடரில் மஞ்சரி, அப்சர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதையும் படிக்க: 46 வயதில் தாயாகவுள்ளதை அறிவித்த சின்ன திரை நடிகை!

இத்தொடரில் இவர் ஒரே காட்சியில் மட்டும் நடித்திருந்தாலும், இத்தொடரின் பாடலில் இக்காட்சி இணைக்கப்பட்டதால், தினமும் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக அன்பில் மகேஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதனால், தயாநிதி மாறன், ‘உன் நண்பன் என்பதால் ஒரே காட்சியில் நடித்ததை தினமும் ஒளிபரப்பு செய்வாயா’ என்று உதயநிதியிடம் கேட்டதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸின் நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அகல்யா தொடரின் டைட்டில் பாடலை டி. இமான் இசையமையத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT