செய்திகள்

சலார் - 2 ஒத்திவைப்பு?

சலார் - 2 குறித்து....

DIN

சலார் - 2 படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தி்லும் நடித்திருந்தனர். சலார் திரைப்படம் 2023 டிச. 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.600 கோடி வரை வசூலித்தது. ஓடிடியில் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், சலார் - 2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை விரைவிலேயே துவங்க இயக்குநர் பிரசாந்த் நீல் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், தற்போது ஜூனியர் என் டிஆரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதுவும் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகி வருவதால் அடுத்தாண்டே இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

அதேபோல், நடிகர் பிரபாஸ் ராஜாசாப் படத்திற்குப் பின் ஹனுமன் இயக்குநர் பிரசாந்த் வர்மா படத்தில் நடிக்கிறார்.

இதனால், சலார் - 2 திரைப்படம் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

SCROLL FOR NEXT