செய்திகள்

70 கோடி பார்வைகளைக் கடந்த அரபிக் குத்து!

அரபிக் குத்து குறித்து...

DIN

அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் 70 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  இதனால் இயக்குநர் நெல்சன் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

பீஸ்ட் படம் ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும், அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, அரபிக் குத்து உலக அளவில் பிரபலமானது.

இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்தனர். சில கிரிக்கெட் வீரர்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோக்களும் வைரலாகின. 

இதையும் படிக்க: ஓஜி சம்பவம் புரோமோ!

அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்தனர். ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

இந்த நிலையில், இப்பாடல் யூடியூப்பில் 700 மில்லியன் (70 கோடி) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

நடிகர் தனுஷின் ரௌடி பேபி பாடலே இதுவரை யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட ( 165 கோடி பார்வைகள்) தமிழ் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெய்ஜிங்கில் புதின், கிம் ஜோங்-உன் பேச்சுவாா்த்தை

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

ஜோலாா்பேட்டை, கந்திலியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு

திருமலையில் 64,935 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT