குறுகிய காலத்தில் நிறைவடையும் தொடர்! காரணம் என்ன?
ரஞ்சனி தொடர் நிறைவு தொடர்பாக...
ரஞ்சனி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நடிகை ஜீவிதா பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சந்தோஷ் நடித்துவருகிறார்.
மேலும் இத்தொடரில் ஸ்ரீலேகா, ஸ்ரேயா அஞ்சான், ஹேமந்த் குமார், கிரிஷ், சுதர்சனம், சல்மான், ரஞ்சனி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
Advertisement
Advertisement
5 நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே இத்தொடரின் மையக்கரு. இயக்குநர் விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், இத்தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், ரஞ்சனி தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள்(climax scenes) விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் விரைவில் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: புதிய தொடரில் ரேஷ்மாவுடன் இணையும் சுந்தரி சீரியல் நடிகர்!
புதிய தொடர் வருகை மற்றும் டிஆர்பி புள்ளிகள் குறைவு போன்ற காரணங்களால் ரஞ்சனி தொடரை விரைவில் முடிக்க தொடர் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
சில நாள்களுக்கு முன்பு ரஞ்சனி தொடர் 100 நாள்களை நிறைவு செய்த நிலையில், இத்தொடர் நிறைவடையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.