செல்வராகவன் கதாபாத்திர போஸ்டர். 
செய்திகள்

ஹிட்ச்காக் இருதயராஜ்... டிடி நெக்ஸ்ட் லெவல் அப்டேட்!

சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் செல்வராகவன் கதாபாத்திர அறிமுக விடியோ அப்டேட்.

DIN

சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் செல்வராகவன் கதாபாத்திர அறிமுக விடியோ அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தில் திரை விமர்சகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரேம் ஆனந்த இயக்கிய இப்படத்தில் கௌதம் மேனன், செல்வராகவன், மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் மே 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் காட்சிகள் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் செல்வராகவனின் கதாபாத்திரம் அறிமுக விடியோ இன்றிரவு 7 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஹிட்ச்காக் இருதயராஜ் என்ற பெயரில் செல்வராகவன் நடித்துள்ளதாகத் தெரிகிறது.

செல்வராகவன் கதாபாத்திர போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவுடன் இருப்பவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள்; என்டிஏ ஒரு துரோகக் கூட்டணி! - முதல்வர் பேச்சு

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: நடிகர் ஜெயராம் வாக்குமூலம்!

ரத்னகுமாரின் ‘29’ படப்பிடிப்பு நிறைவு..! எல்சியூவில் வருகிறதா?

சுதேசி கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்தவர் மகாத்மா காந்தி: பிரதமர் மோடி அஞ்சலி!

பங்குச்சந்தை: 500 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்; ஐடி, உலோகப் பங்குகள் சரிவு!!

SCROLL FOR NEXT