முகப்பு
செய்திகள்

நடிகை பெருமாயி காலமானார்!

73 வயதான நடிகை பெருமாயி உடல்நலக் குறைவினால் உயிரிழந்தார்.

Updated On : 4 மே, 2025 at 2:49 PM
நடிகை பெருமாயி
பகிர்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் நடிகை பெருமாயி. 73 வயதான இவர் இயக்குநர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமாகி, பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை, விஜய்யின் வில்லு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 30க்கும் மேற்பட்ட கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக நடிகர் பசுபதியின் தண்டட்டி படத்தில் நடித்த இவர் உடல்நலக் குறைவு காரணமாக சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்கமால் இருந்தார்.

Advertisement

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகனும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ள சூழலில், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.