செய்திகள்

ஓடிடியில் குட் பேட் அக்லி!

ஓடிடியில் வெளியானது குட் பேட் அக்லி...

DIN

நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த ஏப்.10 ஆம் தேதியன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

சில வித்தியாசமானத் தோற்றங்களில் அஜித் குமார் நடித்திருந்ததால் அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்பட்டது.

அஜித்துடன் இந்தப் படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சுனில், திரிஷா, சிம்ரன், பிரபு, பிரசன்னா, ஜாக்கி ஷரோஃப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள், பிரபல பாடல்களின் ரீ-கிரியேஷன் என ரசிகர்களைக் கவர்ந்திழுத்த இந்தப் படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி-யில் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் ஒரே நாளில் 380 மி.மீ. மழை! நூறு ஆண்டுகளில் அதிகபட்சம்!

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

பென்ஸ் படத்தில் ரவி மோகன்!

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து ரேசன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்: வாக்காளர்களுக்கு ராகுல் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT