இயக்குநர் ஓம் ராவத் 
செய்திகள்

ஆதி புருஷ் இயக்குநர் கலாமுக்கு காவி சாயம் பூசுகிறாரா? ரசிகர்கள் கேள்வி!

தனுஷ் நடிக்கவுள்ள கலாம் பயோபிக் படத்தின் போஸ்டர் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது...

DIN

நடிகர் தனுஷ் நடிக்கும் கலாம் படத்தின் போஸ்டர் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

நடிகர் தனுஷ் இட்லி கடை, குபேரா ஆகிய படங்களில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

மேலும், ’தேரே இஸ்க் மெயின்’ என்ற படத்தில் தனுஷ் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரின் படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், எதிர்பாராத விதமாக ஆதி புருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இயக்கும் ‘கலாம் - தி மிஷைல் மேன் ஆஃப் இந்தியா’ என்ற மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தனுஷ், “உத்வேகம் மற்றும் பெருமைமிக்க தலைவரான நமது அப்துல் கலாம் ஐயாவின் வாழ்க்கையைச் சித்திரிப்பதில், நான் உண்மையிலேயே பாக்கியவானாக உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் கதை அப்துல் கலாம் எழுதிய ’அக்னி சிறகுகள்’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறதாம்.

இந்த நிலையில், படக்குழு வெளியிட்ட போஸ்டரில் கலாமின் பெயருக்கு மட்டும் காவி நிறம் பூசப்பட்டு மற்ற பெயர்களுக்கு நீலம் மற்றும் வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேசியக் கொடியின் வண்ணங்களில் ஒன்றான பச்சை எங்குமே பயன்படுத்தப்படவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த சில ரசிகர்கள் ஆதி புருஷ் எடுத்த இயக்குநர் கலாமுக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார். அவர் எல்லோருக்குமான தலைவர்; உங்கள் அரசியல் விளையாட்டுகளுக்காக புனிதமாகக் கருதப்படும் கலாமின் பெயரைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

SCROLL FOR NEXT