96 பட போஸ்டர், பிரதீப் ரங்கநாதன்.  கோப்புப் படம்
செய்திகள்

96 இரண்டாம் பாகத்தில் நாயகனாக பிரதீப் ரங்கநாதன்? இயக்குநர் விளக்கம்!

96 இரண்டாம் பாகம் படத்தின் சர்ச்சை குறித்து இயக்குநர் கூறியதாவது...

DIN

96 இரண்டாம் பாகம் படத்தின் சர்ச்சை குறித்து இயக்குநர் பிரேம் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

காதலை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டத்தில் இயக்குநர் இருப்பதால் அதில் யார் நடிப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சமீபத்தில் 96 -2 படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்து 96 பட இயக்குநர் கூறியதாவது:

இது எப்போதும் போல் பொய்யான செய்திதான். 96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் 96-2 எடுக்க முடியும். நடிகர் திரு பிரதீப் ரங்கநாதன் அவர்களை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. இதற்கும் 96 இரண்டாம் பாகத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்தப் பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

DIGITAL ARREST மோசடியில் புதிய உச்சம்! 58 கோடியை இழந்த தம்பதி! | Digital Arrest

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

அதிமுகவிலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் அதிர்ச்சித் தகவல்!

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

SCROLL FOR NEXT