த்ரிஷ்யம் - 4 வருமா? ஜித்து ஜோசஃப் பதில்!
த்ரிஷ்யம் தொடர்ச்சி குறித்து ஜித்து ஜோசஃப் பேச்சு...
இயக்குநர் ஜித்து ஜோசஃப் த்ரிஷ்யம் நான்காம் பாகம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் கிரைம் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தன.
தற்போது, இதன் மூன்றாம் உருவாகியுள்ளது. இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜித்து ஜோசப்பிடம், 'த்ரிஷ்யம் நான்காம் பாகம் வருமா?’ எனக் கேட்கப்பட்டது.
அதற்கு, ஜித்து ஜோசஃப், “த்ரிஷ்யம் கதையை இதற்கு மேல் கொண்டு சென்றால் சுவாரஸ்யம் இருக்காது. அதனால், மூன்றாம் பாகத்துடன் இது நிறைவடைகிறது. கதையை நீட்டிக்கும் விருப்பமும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
jeethu joseph about drishyam 4 movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.