நடிகர் ராஜேஷ்  
செய்திகள்

ராஜேஷ் கட்டி வைத்திருந்த கல்லறையில் உடல் நல்லடக்கம்!

நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது...

DIN

நடிகர் ராஜேஷின் உடல் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் (75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்ததுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், சென்னை கீழ்பாக்கத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பே ராஜேஷ் தனக்காகக் கட்டி வைத்திருந்த கல்லறையில் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதே கல்லறையில் அவரின் தாய், தந்தை, மனைவி ஆகியோரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், தன் சவப்பட்டியை வைப்பதற்கும் இடைவெளி விட்டு ராஜேஷ் கட்டியிருந்தார். ரஷிய நாட்டில் ஒரே குடும்பத்தினரின் உடல்கள் இப்படித்தான் நல்லடக்கம் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT