பிரணவ் மோகன்லால் 
செய்திகள்

பாராட்டுகளைப் பெறும் பிரணவ் மோகன்லால் படம்!

பாராட்டுகளைப் பெறும் டைஸ் ஐரே...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான டைஸ் ஐரே ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி துவங்கி சரியாக ஒரு மாதத்தில் நிறைவடைந்தது. இப்படத்திற்கு ‘டைஸ் ஐரே’ (Dies irae) எனப் பெயரிட்டிருந்தனர். இதன் பொருள் லத்தீன் மொழியில் மரணத்தைக் குறிக்கிறது.

இந்த நிலையில், டைஸ் ஐரே ஹாலோவீன் நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் மலையாள ஹாரர் சினிமாவில் முக்கியமான படம் என்றதுடன் கடைசி 30 நிமிடத்தையும் பாராட்டி வருகின்றனர்.

ஹாரர் படங்களை மட்டுமே இயக்கி வரும் ராகுல் சதாசிவன் இந்தியளவில் கவனிக்கப்பட வேண்டிய ஹாரர் இயக்குநர் என்றும் விமர்சனங்கள் வருகின்றன.

மேலும், இப்படம் முதல் நாளில் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பதிவு செய்யும் என்றே தெரிகிறது.

pranav mohanlal's dies irae get good response from fans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT