பிக் பாஸில் போட்டியாளர்கள் ஒருவரைக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நான்கு வாரங்களைக் கடந்துள்ளது. இதுவரை 5 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், பிரஜன், சாண்ட்ரா, திவ்யா, அமித் பார்கவ் ஆகிய 4 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக இந்த வாரம் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாள்களாகவே பழைய போட்டியாளர்களுக்கும், வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கம்ருதீனும், பிரவீனும் ஒருவரைக்கொருவர் மாறிமாறி தாக்கிக் கொள்கிறார்கள். சக போட்டியாளர்கள் அனைவரும் இருவரையும் தடுக்க முயற்சிக்கிறார்கள். திடீரென கம்ருதீனுக்கும் பிரஜனுக்கும் மோதல் ஏற்படுகிறது.
பிரஜனின் மனைவி சாண்ட்ரா, “நீ ஏன் இப்படி செய்கிறாய்” என்று அழும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
ரெட் கார்டு கொடுக்கப்படுமா?
இதுவரை பிக் பாஸ் சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசனில் கெட்ட வார்த்தைகள், மோதல்கள் என தொடர்ந்து நடைபெற்று வருவதாக போட்டியாளர்களுக்கு ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
குழந்தைகள் பார்க்கும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லை என்ற கருத்து ஏற்கெனவே இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது வன்முறையைக் காட்சிகள் அரங்கேறியுள்ளது.
பிக் பாஸ் வீடா? அல்லது குத்துச் சண்டை மேடையா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது. உடனடியாக மோதலில் ஈடுபட்ட போட்டியாளர்களுக்கு பாரபட்சமின்றி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.