ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3 பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை தொடர் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வந்த ஹார்ட் பீட் - 2 இணையத் தொடர் 100 எபிசோடுகளுடன் இன்று(நவ. 6) நிறைவடைந்துள்ளது.
ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது.
இந்தத் தொடரில் நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, பாடினி குமார், யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வந்தனர்.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வந்த ஹார்ட் பீட் இணையத் தொடர், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று ஒளிபரப்பாகி வந்தது.
ஹார்ட் பீட் இணையத் தொடரில் வெளியாகும் எபிசோடுகளை, ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வந்தனர். இந்தத் தொடர் நிறைவடைந்ததனால், சமூக ஊடகங்களில் ரசிகர்கள் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஹார்ட் பீட் தொடர் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், அடுத்த சீசனான 3வது பாகம் விரைவில் ஒளிபரப்பாகும் என்று தொடர் குழு அறிவித்துள்ளது.
அடுத்தாண்டு 2026-ல் ஹார்ட் பீட் சீசன் 3 ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ஹார்ட் பீட் தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ரீனாவைக் காப்பாற்றினாரா விஜய்? ஹார்ட் பீட் - 2 தொடர் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.