56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்க மயில் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோவாவில், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் நவ.20 முதல் நவ.28 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த நிலையில், விழாவில் நடைபெறும் சர்வதேச போட்டியின் கீழ் தங்க மயில் விருதுக்கு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்த ‘அமரன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக அமரன் திரையிடப்படுகின்றது.
முன்னதாக, நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரஜினிகாந்துக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கௌரவம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.