ஆர்யா 
செய்திகள்

வேட்டுவம் கிளைமேக்ஸுக்கு காத்திருக்கும் ஆர்யா!

ஆர்யாவின் புகைப்படம் வைரல்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ஆர்யா வேட்டுவம் திரைப்படத்தின் கிளைமேக்ஸுக்காக உடல் தோற்றத்தை வலுப்படுத்தியுள்ளார்.

தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கலானுக்கு முன்பே திட்டமிடப்பட்ட வேட்டுவம் என்கிற படத்தின் பணிகளைத் துவங்கினார்.

இதில், நாயகனாக நடிகர் அட்டகத்தி தினேஷும் வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர். முழுநீள கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தற்போது, இதன் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு மழையால் தள்ளிச் சென்றபடியே இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் ஆர்யா தன் கட்டுமஸ்தான தோற்றப் புகைப்படங்களை வெளியிட்டு, ”மழையே மழையே போ... இதை எப்போதும் வைத்திருக்க முடியாது... கிளைமேக்ஸ் தொடர்கிறது..” எனக் கூறியுள்ளார்.

actor arya shares vettuvam movie look pictures

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதாநாயகனாகும் தனுஷ் மகன்?

கண்ணீர் வருகிறது... வெங்காயமல்ல, தங்கத்தை நினைத்து!

தனியார் பேருந்தில் அதிக கட்டணம்! தனி ஆளாக மறியலில் ஈடுபட்ட நபர்!

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

SCROLL FOR NEXT