பிருத்விராஜின் விலாயத் புத்தா பட டிரைலர்!
நடிகர் பிருத்விராஜின் விலாயத் புத்தா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...
நடிகர் பிருத்விராஜ் நாயகனாக நடித்துள்ள “விலாயத் புத்தா” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜெயன் நம்பியார் இயக்கத்தில், நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “விலாயத் புத்தா”.
சந்தன மரக்கடத்தல்களை மையமாகக் கொண்டு பிரபல மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ’விலயாத் புத்தா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
பிரபல இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ஷமி திலகன், அனு மோகன், சூரஜ் வெஞ்சாரமூடு, டீஜே அருணாச்சலம், டி.எஸ்.கே. ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் டீசர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ‘விலாயத் புத்தா’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று (நவ. 14) வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: நான் கடவுள் ராஜேந்திரனின் ராபின்ஹுட் பட டிரைலர்!
The trailer of the film “Vilaayat Buddha”, starring actor Prithviraj in the lead role, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.