நடிகர் சிலம்பரசன் பள்ளிக் குழந்தைகளை நோக்கி கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்திய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசலில் பள்ளி வாகனம் அருகே சிலம்பரசன் பயணித்த கார் நின்றுக்கொண்டிருக்கும்போது, பள்ளிக் குழந்தைகள் இவரை அடையாளம் கண்டு கூச்சலிட்டனர்.
அப்போது அவர்களைக் கண்ட சிலம்பரசன், கார் கண்ணாடியை இறக்கி அவர்களை நோக்கி கையசைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
நடிகர் சிலம்பரசனுக்கு பள்ளி மாணவர்கள் பலர் ரசிகர்களாக உள்ளதை மெய்ப்பிக்கும் விதமாக இந்த விடியோ உள்ளதாக அவரின் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிம்புவின் செயலுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது சிம்புவின் 149வது படமாக உள்ளது.
இதையும் படிக்க | சாதி எனும் வைரஸால் சமூக இடைவெளி... பாலிவுட் இயக்குநர் ஆதங்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.