திவாகர் / விஜய் சேதுபதி படம் - எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 9: திவாகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விஜய் சேதுபதி!

பிக் பாஸ் சிசன் 9 நிகழ்ச்சியில் இருந்து (வாட்டர் மெலன் ஸ்டார்) மருத்துவர் திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சிசன் 9 நிகழ்ச்சியில் இருந்து (வாட்டர் மெலன் ஸ்டார்) மருத்துவர் திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் திவாகரின் நீண்ட நாள் ஆசையையும் விஜய் சேதுபதி நிறைவேற்றினார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வது வாரத்தை எட்டியுள்ளது. வாரமொரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில், 5 வது வார இறுதியில் இருந்து மருத்துவர் திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் சுபிக்‌ஷா, கனி, வியானா, விக்ரம், சாண்ட்ரா, ரம்யா, பார்வதி, கனி, திவாகர், திவ்யா மற்றும் அரோரா ஆகியோர் வெளியேறும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களுக்கு இந்த வாரம் முழுக்க மக்கள் வாக்களித்தனர். இதில், குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் மருத்துவர் திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதுவரை இல்லாத வகையில் திவாகர் வெளியேறியது முன்னோட்ட விடியோவிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை முன்னோட்ட விடியோவில் அறிவித்ததில்லை. திவாகருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவர் வெளியேறுவதைக் கூறினாலும் நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு குறைவிருக்காது என்பதால், முன்னோட்ட விடியோவிலேயே திவாகர் வெளியேறுவதை அறிவித்துள்ளனர்.

திவாகரை முத்தமிட்டு கட்டியணைத்துக்கொண்ட விஜய்சேதுபதி

வெளியேறும்போது திவாகரின் நீண்ட நாள் ஆசையை விஜய் சேதுபதி நிறைவேற்றியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விஜய் சேதுபதியிடம் முத்தம் கேட்டிருந்தார். ஆனால், உங்கள் போட்டி எப்போது மற்றவர்களால் பாராட்டப்படுகிறதோ? அப்போதே தருவேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தவகையில், திவாகர் வெளியேறும்போது மேடையில் அவருக்கு முத்தம் கொடுத்து அரவணைத்துக்கொண்டார். வெளி உலக வாழ்க்கைக்கு வாழ்த்து கூறியும் அனுப்பிவைத்தார்.

இதையும் படிக்க | முக்கியத்துவம் பெறும் நேரத்துக்கு மாற்றப்பட்ட மகளே என் மருமகளே தொடர்!

watermelon star diwakar evicted from bigg boss 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி ஒருநாள்: 212 ரன்கள் இலக்கை துரத்தும் பாகிஸ்தான்; தொடரை முழுமையாக கைப்பற்றுமா?

பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் தலைவரின் மகன் சுட்டுக்கொலை!

வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தில்லி கார் வெடிப்பு: தற்கொலைப் படைத் தாக்குதல் - என்ஐஏ அறிவிப்பு

மின்னல் பார்வை... தாரணி!

SCROLL FOR NEXT