பிரவீன்ராஜ் தேவசகாயம் படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் என்ன? பிரவீன்ராஜ் விளக்கம்

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் குறித்து நடிகர் பிரவீன்ராஜ் அளித்துள்ள விளக்கம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் குறித்து நடிகர் பிரவீன்ராஜ் தேவசகாயம் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்திற்கு முன்பு பிரவீன்ராஜ் தேவசகாயம் வெளியேற்றப்பட்டார். இவருடன் துஷாரும் வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இவர் வெளியேறும்போது எந்தவித அழுகையும் சோகமும் இல்லாமல் எதார்த்தமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து விடைபெற்றார்.

பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களின் தகுதி, தராதரம் குறித்துப் பேசியது, பெண்களிடம் நெருக்கமாகப் பழகுவதைப்போல நடந்துகொள்வது என பல்வேறு விமர்சனங்கள் திவாகர் மீது வைக்கப்பட்டது.

இதனால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

திவாகருக்கு இத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், பிரவீன்ராஜ் வெளியேறியது தற்போது வரை அதிருப்தியாக இருப்பதாகவும், இது நேர்மையான எவிக்‌ஷன் இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு

இந்நிலையில், இந்த அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரவீன்ராஜ் பதில் அளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு என்னுடைய தன்னப்பிக்கை குறைவாக இருந்ததே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் நீடிப்பதற்கு திறமையும், டாஸ்க் சரியாகச் செய்வது மட்டுமே ஒரு அங்கம் என நினைத்திருந்ததாகவும், அதனை விட கருத்துகளை சுதந்திரமாக முன்வைக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகன்!

Bigg boss 9 tamil praveenraj devasagayam explanation about eviction

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ. 309 கோடி எங்கே? - அண்ணாமலை கேள்வி

நீல நிற மயில்... அஞ்சு குரியன்

ரெட்மி வடிவில் ஓப்போவின் புதிய இரு ஸ்மார்ட்போன்கள்!

இந்தியாவில் எக்ஸ் சமூக வலைத்தளம் முடங்கியது

2022-இல் ஆர்ஜென்டீனாவை கலங்கடித்த நெதர்லாந்து உலகக் கோப்பைக்குத் தேர்வு!

SCROLL FOR NEXT