செய்திகள்

திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா வா வாத்தியார்?

வா வாத்தியார் வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமானது.

இதனைத் தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து முடித்தார்.

இப்படத்தில் நாயகியாக க்ருத்தி ஷெட்டியும், வில்லனாக சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வா வாத்தியாரின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்னும் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே, ஓடிடி தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதால் தயாரிப்பு நிறுவனம் இயக்குநருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்ட தேதிக்கு வாத்தியார் வருவாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசியாவின் மிக உயரமான கட்டடத்தில் ஏறி சாதனை!

எங்களுடன் போட்டிபோடும் அளவுக்கு எதிரிகள் இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான்..!

‘இனிவரும் தலைமுறைகளுக்கும் உத்வேகமளிக்கும்!' - பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள சாதனையாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

காற்று மாசுபாட்டுக்கு நாம் கொடுக்கும் விலை மிகப்பெரியது: ராகுல் காந்தி கவலை

SCROLL FOR NEXT