பிக் பாஸ் வீட்டில் இதற்கு மேல் தன்னால் வாழ முடியாது என்று போட்டியாளர் ரம்யா ஜோ தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்து 7-வது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை 8 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், தற்போது 16 பேர் போட்டியில் உள்ளனர்.
இந்த வார டாஸ்க்காக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சமையல் அணி, வீட்டு பராமரிப்பு அணி மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் அணி என மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு, சுவாரஸ்யமாக செய்யும் அணி அடுத்த வார கேப்டன் டாஸ்க்கில் பங்குபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த டாஸ்க்கில் சிறப்பாக செய்யும் அணிகளுக்கு சக அணியினர் புள்ளிகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், மூன்று அணிகளில் இருந்து சிறப்பாக செயல்பட்ட ஒருவர், மோசமாக செயல்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
அதில், ரம்யா ஜோ-வை மோசமாக விளையாடியவர்களின் ஒருவராக சகப் போட்டியாளர்கள் தேர்வு செய்கின்றனர்.
இதில் மனமுடைந்த ரம்யா ஜோ, ”நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் என்னை மோசமாக விளையாடியதாக விக்ரம் தெரிவித்தார். இதயப்பூர்வமாக நான் கூறுகிறேன். நான் முழுவதும் உடைந்துவிட்டேன். இதற்கு மேல் என்னால் இந்த வீட்டில் வாழ முடியாது. ஒவ்வொருத்தரும் அவர்களின் வார்த்தைகளால் குத்துகிறார்கள்” என்று சகப் போட்டியாளர்களிடம் தெரிவிக்கும் வகையில் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.