இசையமைப்பாளர் அனிருத் புதிதாக இசை நிறுவனம் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியளவில் பேசப்படும் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இறுதியாக, கூலி திரைப்படத்துக்கு இசையமைத்து கவனம் பெற்றிருந்தார். இவர் இசையமைத்த எல்ஐகே படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையே, நடிகர் சிம்பு நடிக்கவுள்ள அரசன் திரைப்படத்தின் பெயர் டீசருக்கு நல்ல பின்னணி இசையைக் கொடுத்திருந்தார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், அனிருத் புதிதாக இசை நிறுவனத்தைத் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது திரைத்துறையினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், இசைத்துறைக்கான வணிகம் மிகப்பெரியதாகவே உள்ளது. இந்தியாவின் முன்னணி இசை நிறுவனங்களில் அனிருத் பாடல்கள் அதிகம் கேட்கப்பட்டு வருவதால், சொந்தமாகவே ஒரு நிறுவனத்தைத் துவங்கி தன் சினிமா பாடல்களையும் ஆல்பம் பாடல்களையும் வெளியிட முடிவு செய்துள்ளாராம்.
இதையும் படிக்க: தேரே இஷ்க் மெய்ன் படத்தால் பாதிப்புக்கு ஆளானேன்: க்ரித்தி சனோன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.