பிக் பாஸ் வீட்டில் பெயர் எழுத, படிக்க கற்றுக்கொண்ட ரம்யா!
பிக் பாஸ் போட்டியில் தனது பெயரை எழுத, படிக்க கற்றுக்கொண்ட மேடை நடனக் கலைஞர் ரம்யா குறித்து...
தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளாக இருந்தும் பிக் பாஸ் வீட்டில்தான் முதல்முறை தனது பெயரை தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டதாக மேடை நடனக் கலைஞர் ரம்யா ஜோ தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த இவர், பள்ளிக் கூட படிப்பையும் முழுவதுமாக முடிக்காமல் தமிழ்நாட்டில் விழாக்கால மேடைகளில் நடனமாடத் தொடங்கினார். இதில் கிடைத்த வருவாயால், தொடர்ந்து முழுநேர மேடை நாடகக் கலைஞராகவே மாறினார்.
பெற்றோர் இல்லாததால், தனது சகோதரிகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காக பள்ளிப் படிப்பை தொடராமல் முழுநேர நடனக் கலைஞராக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
Advertisement
Advertisement
தற்போது பிக் பாஸ் வீட்டில் பள்ளிக்கூட போட்டி நடைபெற்று வருவதால், அதில் மாணவியாக வேடமேற்றுள்ள ரம்யா, தனது பெயரை எழுத, படிக்க கற்றுக்கொண்டார்.
தமிழ் ஆசிரியையாக வேடமேற்றுள்ள கனி திரு, போட்டியை தனிப்பட்ட முறையில் பார்க்காமல், ரம்யாவுக்கு தனதுபெயரை தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுத்தார்.
மேலும், தமிழில் பொருளுடன் 5 திருக்குறளையும் பயின்றார். இதனை பலர் முன்பு கூறி, சக போட்டியாளர்களையும் ரசிகர்களையும் வியப்பிற்குள்ளாக்கினார். இதனால், இந்த வாரத்திற்கான சிறந்த மாணவியாக / போட்டியாளராக ரம்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: பார்வையாளர்களைக் கவர்ந்த பிக் பாஸ் பள்ளிக்கூடம்!
bigg boss 9 tamil Ramya joo learn tamil in school ask
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.