சிம்பு - வெற்றி மாறன் திரைப்படத்தின் புரோமோ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு புதிய திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார். கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகிறது.
இதில் நாயகனாக நடிகர் சிலம்பரசனும் முக்கிய கதாபாத்திரங்களில் வடசென்னை திரைப்படத்தில் நடித்தவர்களும் நடிக்கின்றனர்.
அண்மையில், இப்படத்தின் அறிவிப்பு டீசர் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. சிம்பு நடந்து வருவது போன்ற காட்சி இப்படம் வடசென்னை திரைப்படத்தை மையப்படுத்தி உருவாகி வருவதை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புரோமோ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், படத்தின் தயாரிப்பாளர் தாணு, “சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க எஸ்டிஆர் மற்றும் வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும்.
ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது. இதுவே எஸ்டிஆர் - வெற்றிமாறன் கூட்டணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கும் சிறப்பு தருணமாகும். இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்” எனப் பதிவிட்டார்.
இதனால், இன்று வெளியாக வேண்டிய புரோமோ ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: கடலில் மூழ்கிய படகு... மண்டாடி படப்பிடிப்பில் விபத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.