விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆஹா கல்யாணம் தொடர் முடிவடைந்தது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடரும் டிஆர்பியில் முன்னணியில் இருந்த தொடருமான ஆஹா கல்யாணம் தொடர் 644 எபிசோடுகளுடன் முடிவடைந்தது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் ஆஹா கல்யாணம். இத்தொடரில் நடிகை அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும் விக்ரம் ஸ்ரீ நாயகனாகவும் நடித்து வந்தனர்.
மேலும் இந்தத் தொடரில் மெளனிகா, விபிஷ் அஷ்வந்த், காயத்ரி ஸ்ரீ, பவ்யா ஸ்ரீ, ஆர்.ஜி. ராம், ஆடிட்டர் ஸ்ரீதர், ஷில்பா உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.
இந்த நிலையில், ஆஹா கல்யாணம் தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் பல்வேறு திருப்பங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ஆஹா கல்யாணம் தொடர், 644 எபிசோடுகளுடன் கடந்த அக். 3 ஆம் தேதி முடிவடைந்தது.
இந்தத் தொடர் ஒளிபரப்பான மாலை 6 மணிக்கு தாய் கிரேயேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சமீர், ஷோபனா நடிக்கும் பூங்காற்று திரும்புமா திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.