செய்திகள்

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் பிரவீன் காந்தி!

ரட்சகன், ஜோடி, நட்சத்திரம், துள்ளல் ஆகிய படங்களின் இயக்குநர்...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் பிரவீன் காந்தி நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி பிரமாண்டமாகத் தொடங்கியது. விஜய் சேதுபதி இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

போட்டியின் தொடக்க நாளான இன்று (அக். 5) போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகின்றனர்.

பிக் பாஸ் வீட்டின் 8வது போட்டியாளராக இயக்குநர் பிரவீன் காந்தி நுழைந்துள்ளார். ரட்சகன், ஜோடி, நட்சத்திரம், துள்ளல் ஆகிய படங்களின் இயக்குநரான பிரவீன் காந்தி, சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளால் விமர்சிக்கப்பட்டு வந்தவர்.

நடிகராக வேண்டும் என்கிற கனவோடு சினிமாவிற்குள் நுழைந்த பிரவீன் காந்தி, எந்த வித சினிமா பின்புலமும் இல்லாததால் நடிக்கும் வாய்ப்பு அமையாததால், இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராகப் பணிக்குச் சேர்ந்தார்.

பிரவீன் காந்தி / சபரி

1997 ஆம் ஆண்டு ரட்சகன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முன்னணி நடிகரான நாகர்ஜூனா , உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் ஆகியோரை நடிக்க வைத்து கவனம் ஈர்த்தார். ரட்சகன் படத்தில் இடம்பெற்றுள்ள ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் இன்றளவும் மக்களால் ரசிக்கத்தக்கவையாக உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ள ஏ.ஆர் முருகதாஸ் , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் பிரவீன் காந்தியின் உதவி இயக்குநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரி

பிக்பாஸ் வீட்டின் 7வது போட்டியாளர் சபரி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலைக்காரன் தொடரின் நாயகனாக நடித்தவர். தற்போது பொன்னி தொடரில் நடித்து பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்குச் செல்லும் லட்சியத்தோடு பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார்.

இதையும் படிக்க | தொடங்கியது பிக் பாஸ் 9: முதல் போட்டியாளர் திவாகர் - அரோரா!

bigg boss 9 contestant Praveen gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரே கிருஷ்ணா கோயிலில் தாமோதர தீபத் திருவிழா நாளை தொடக்கம்

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பலத்த மழை

விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்க தனிக்குழு அமைக்க வலியுறுத்தல்

கடல் சங்குகள் பறிமுதல்: இருவா் கைது

அஞ்சல் துறை சாா்பில் கடிதம் எழுதும் போட்டி

SCROLL FOR NEXT