எல்ஐகே வெளியீடு ஒத்திவைப்பு!
எல்ஐகே வெளியீட்டுத் தேதியில் மாற்றம்...
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், க்ருத்தி ஷெட்டி நடிப்பில் உருவான எல்ஐகே திரைப்படம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருந்தது.
ஆனால், அதே நாளில் டூட் திரைப்படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு படங்களையும் வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்ததால் தீபாவளி வெளியீட்டில் எந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், டூட் திரைப்படம் அக். 17 ஆம் தேதி வெளியாவது உறுதியானதால் எல்ஐகே திரைப்படத்தை ஒத்திவைத்துள்ளனர்.
இதனால், எல்ஐகே நவம்பர் அல்லது டிசம்பர் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கார்த்திக்கு வில்லனான ஆதி?