ரஜினி, கமல், லோகேஷ் கனகராஜ் 
செய்திகள்

ரஜினி - கமல் திரைப்படத்திற்குத் தயாராகும் லோகேஷ் கனகராஜ்?

ரஜினி, கமல் படத்தின் கதை விவாதத்தில் லோகேஷ்...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினி - கமல் திரைப்படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக ஓரளவு வசூலீட்டியது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் லோகேஷ் நாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனை வைத்து புதிய திரைப்படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. நடிப்பது உண்மைதான்; ஆனால், இயக்குநர் யாரென முடிவாகவில்லை என ரஜினி கூறியிருந்தார்.

இந்த நிலையில், ரஜினி - கமல் திரைப்படத்திற்கான கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி இணைந்தால் 46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

director lokesh kanagaraj discussing the script for rajini, kamal movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக 178 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

SCROLL FOR NEXT