இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் திரைப்படத்தில் நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக். 17 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்வெளியீட்டு விழா நேற்று (அக்.12) சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில், இயக்குநர்கள் பா. இரஞ்சித், மாரி செல்வராஜ், அமீர், நடிகர்கள் துருவ், பசுபதி, லால், அனுபமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “பைசன் திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை முன்வைத்து உருவான கதை. இப்படியொரு கதையை தென்மாவட்ட மக்களின் வாழ்க்கையோடு கூற வேண்டும் என நினைத்தபோது சகோதரர் மணத்தி கணேசனிடம் சென்று, உங்கள் வாழ்க்கையை என் திரைமொழியில், அரசியல் பார்வையோடு சொல்ல விரும்புகிறேன் என. அவர் நீ ஒரு விஷயம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என ஒப்புக்கொண்டார். இப்படித்தான், பைசன் உருவானது.
நான் இயக்குநராக புகழையும் பணத்தையும் சம்பாதித்துவிட்டேன். அதற்காக, என் மக்களுக்கு என்ன செய்தேன் என்கிற கேள்விக்குப் பதில் பைசன்தான். இது, என் ஊர் மக்களுக்காக, என் மாவட்டத்திற்காக, தென்மாவட்டங்களுக்காக உருவான திரைப்படம். என்னுடைய உச்சபட்ச உணர்வும் கர்வமும் பைசன்தான். உண்மையில், என் வாழ்க்கையில் எந்த தீபாவளிக்கும் காத்திருந்ததில்லை. ஆனால், இந்த தீபாவளிக்குக் காத்திருக்கிறேன். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைவதோ அல்லது படம் நன்றாக இருக்கிறது என்கிற விமர்சனங்களைத் தாண்டி இது ஒரு உரையாடலை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
நான் இத்தனையாண்டு காலம் சினிமா கற்றுக்கொண்டதும் என் திரைமொழியைப் பயின்றதும் பைசனை எடுக்கத்தான் என நினைக்கிறேன். நடிகர் விக்ரம் அவரது மகன் துருவ்வை என்னிடம் அனுப்பி வைத்து, ‘உன் மகன் போல் பார்த்துக்கொள்’ என்றார். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன். இது துருவ்வுக்கு வெற்றியைத் தரும். நடிகர் விக்ரம் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு பைசன் சமர்ப்பணம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: லவ் டுடே - 2 திட்டத்தில் பிரதீப் ரங்கநாதன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.