தன்னைப் பார்த்து விசிலடித்த ரசிகரை நடிகர் அஜித் கண்டித்துள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேநேரம், அஜித் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் கார் பந்தயங்களிலும் கலந்துகொண்டு வருகிறார். மேலும், நரேன் கார்த்திகேயனுடன் மலேசியாவில் நடைபெறும் பந்தயத்திலும் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில், ரேஸ் பயிற்சியின்போது ரசிகர் ஒருவர் அஜித்தைப் பார்த்து உற்சாகமாகக் குரல் கொடுத்தார். அஜித்தும் சிரித்தபடி கையசைத்ததும், அந்த ரசிகர் விசிலடித்தார்.
அதனைக் கவனித்த அஜித், இப்படியெல்லாம் செய்யக்கூடாது என சைகை மூலம் கண்டித்து முறைத்துப் பார்த்தபடி சென்றுவிட்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: காளமாடன் வருகை... யார் இந்த மணத்தி கணேசன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.