வடசென்னையின் உலகம்... அரசன் புரோமோ!
அரசன் திரைப்படத்தின் புரோமோ வெளியானது...
அரசன் திரைப்படத்தின் புரோமோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கேங்ஸ்டர் கதையாக அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் புரோமோ தமிழகத்தின் சில திரைகளில் நேற்று (அக்.16) மாலை வெளியாகி ரசிகர்களிடம் கொண்டாட்டத்தைக் கொடுத்தது.
இந்த நிலையில், அரசன் புரோமோவை யூடியூப்பில் இன்று வெளியிட்டுள்ளனர். 5 நிமிடத்திற்கும் அதிகமான இந்த புரோமோவில் சிம்பு இளவயது தோற்றத்தில் முகம் முழுக்க ரத்தத்துடன் நடந்துவரும் காட்சி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், வடசென்னையின் சொல்லப்படாத கதை என்கிற அறிவிப்புடன் இடம்பெற்ற அனிருத்தின் பின்னணி இசையும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கும் என்றும் தெரிகிறது.
இதையும் படிக்க: பைசன் - காளமாடன் வெல்லட்டும்! உதயநிதியின் ரிவ்யூ!