ஹரிஷ் கல்யாண், டீசல். 
செய்திகள்

காலாவதியான திரையரங்குகள்... டீசல் இயக்குநர் ஆதங்கம்!

திரைகள் ஒதுக்கீடு குறித்து டீசல் இயக்குநர்...

இணையதளச் செய்திப் பிரிவு

டீசல் திரைப்படத்தின் இயக்குநர் தங்களுக்கு முறையான திரைகள் கிடைக்கவில்லை என ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இந்த தீபாவளி வெளியீடாக பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ்வின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வந்தன. இதில், டியூட் மற்றும் பைசன் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.

ஆனால், டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் வணிக ரீதியாகச் சரிவையே சந்தித்துள்ளது.

இந்த நிலையில், எந்தெந்த திரைப்படங்களுக்கு எவ்வளவு டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன என்கிற தரவுகளை சினிமா சார்ந்த நிறுவனம் ஒன்று வெளியிட்டது.

அதில், டீசலுக்கு மிகக் குறைவான டிக்கெட்களே விற்றது தெரியவந்தது. இதனைப் பார்த்த டீசல் இயக்குநர் சண்முகம் முத்துச்சாமி, “எமக்கு ஒதுக்கப்பட்டவை 100 + திரையரங்குகள் மட்டுமே. அதில், பல காலாவதியான திரையரங்குகள் அடங்கும் என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்’ எனத் தன் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.

director shanmugam muthusamy diesel post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்ஜேடியின் தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் தோ்வு!

ஐசிஐசிஐ வங்கியின் 3வது காலாண்டு வருவாய் சரிவு!

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்: தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம்!

அபிஷேக் சர்மா, சூர்யகுமார் அதிரடி; 10 ஓவர்களில் நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

ஆசியாவின் மிக உயரமான கட்டடத்தில் ஏறி சாதனை!

SCROLL FOR NEXT