பிக் பாஸ் போட்டியாளர்கள் படம் - எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 9: 3வது வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்கள் யார்?

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் 3வது வாரத்தில் வெளியேறத் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 3 வது வாரத்தில் வெளியேறத் தேர்வு செய்யப்பட்ட (நாமினேஷன்) நபர்களின் பட்டியலில் 9 பேர் இடம்பெற்றுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் ஏற்கெனவே வெளியேறியுள்ளனர்.

தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, நடிகை கெமி, ஆதிரை, ஆடல் - பாடல் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்‌ஷா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய 17 பேர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 3வது வாரத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் நிகழ்ச்சியில் இனி தொடரத் தகுதி இல்லை எனக் கூறி, வெளியேற்ற நினைக்கும் இரு நபர்களின் பெயர்களை போட்டியாளர்கள் பரிந்துரை செய்யலாம். இதில் அதிக நபர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நபர் நாமினேஷன் செய்யப்பட்டவராகக் கருதப்படுவார்.

அந்தவகையில் இந்த வாரம் அரோரா, துஷார், ஆதிரை, கானா வினோத், ரம்யா ஜோ, அகோரி கலையரசன், பிரவீன், சுபிக்ஷா, வியனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த வாரம் முழுக்க ரசிகர்கள் வாக்களிக்க வேண்டும்.

அதிக வாக்குகளைப் பெறும் நபர்கள் போட்டியில் தொடரலாம். மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை இந்த வார இறுதி வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் படிக்க | பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்! தடை செய்ய வலியுறுத்தல்

Bigg boss 9 3rd week nomination list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT