டியூட், பைசன் மற்றும் டீசல் ஆகிய திரைப்படங்களின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீபாவளி வெளியீடாக பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ்வின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வந்தன. இதில், டியூட் மற்றும் பைசன் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
ஆனால், டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இந்த நிலையில், டியூட் திரைப்படம் தமிழ், தெலுங்கில் சேர்த்து ரூ. 83 கோடியை வசூலித்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று ரூ. 18 கோடியையும் டீசல் ரூ. 2 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: விரைவில் புதிய சிம்பொனி..! இளையராஜா வெளியிட்ட அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.