சினிமாவில் 20 ஆண்டுகள்! ரசிகர்களுடன் கொண்டாடிய ரெஜினா!
ரசிகர்களுடன் ரெஜினா கேசண்ட்ரா...
நடிகை ரெஜினா கேசண்ட்ரா சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்ததை ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவரான நடிகை ரெஜினா கேசண்ட்ரா தமிழில் 2005-ல் ’கண்டநாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, அழகிய அசுரா படத்தில் நடித்தவர் 2010 ஆம் ஆண்டு சூர்யகாந்தி என்கிற தெலுங்கு படம் மூலம் நாயகியானார்.
பின், சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நாயகர்களாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் மூலம் தமிழில் நாயகியானார். இப்படத்தில், இவரின் கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இவர் நடித்த ராஜதந்திரம், மாநகரம் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து, சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை படங்களில் நல்ல நடிப்பை வழங்கியிருந்தார். இறுதியாக, விடாமுயற்சியிலும் அஜித்துக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது, மூக்குத்தி அம்மன் - 2, செக்சன் 108 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில், ரெஜினா கேசண்ட்ரா திரைத்துறைக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதற்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிலையில், ரெஜினா தன் ரசிகர்களுடன் இதனைக் கொண்டாடியுள்ளார்.
இதையும் படிக்க: டியூட், பைசன், டீசல் வசூல் எவ்வளவு?
regina celebrate her 20 years cinema journey with fans
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.