ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடர் விரைவில் நிறைவடைகிறது.
2021 ஆகஸ்ட் முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவரும் நினைத்தாலே இனிக்கும் தொடர் 1400 எபிசோடுகளை கடந்துள்ளது.
இந்தத் தொடரில் ஸ்வாதி சர்மா, ஆனந்த் செல்வன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்வாதியின் அழுத்தமான நடிப்பு இத்தொடருக்கான கூடுதல் வலுவை சேர்த்து வருகிறது. இவர் இத்தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
இனிப்பு வகைகளைச் சுட்டு விற்பனை செய்யும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண், இனிப்பு வகைகளைக் கொண்டு வணிகம் செய்யும் செல்வந்தர் வீட்டு மகனை திருமணம் செய்துகொள்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதை.
அடுத்தடுத்த திருப்பங்களைக் கொண்டு திகில் மற்றும் மர்மங்கள் நிறைந்த காட்சிகள், இத்தொடரில் அமைக்கப்பட்டுள்ளதால, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் பிரியன் இயக்கும் இத்தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நினைத்தாலே இனிக்கும் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. இத்தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, தொடர் நிறைவு பெறும்.
நினைத்தாலே இனிக்கும் தொடர் நிறைவடையவுள்ளது சிலருக்கு அதிர்ச்சியை அளித்தாலும், 1400 நாள்கள் கடந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால், இந்தத் தொடரை முடித்து, புதிய தொடரைத் தொடங்க வேண்டும் என்று ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.