பிக் பாஸ் போட்டியாளர்கள் உடமைகள், காலணிகள், அழகு சாதனப் பொருள்கள் என அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா மற்றும் ஆதிரை ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் உள்ள நிலையில், அடுத்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் போட்டி தொடங்கி 20 நாள்களை எட்டும் நிலையில், இதுவரை சுவாரஸ்யமாக எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. 24 மணிநேரமும் போட்டியாளர்கள் சண்டை மட்டுமே போட்டுக் கொண்டிருப்பதால், பார்வையாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
கடந்த சீசன்களை ஒப்பிடுகையில், மிக மோசமான போட்டியாளர்களை கொண்ட சீசன் என்ற பெயரையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி ரசிகர்களை ஈர்க்கும் வகையில், டாஸ்க்குகள் கொடுக்கப்படவுள்ளன.
இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் போட்டியாளர்களுடன் பேசும் பிக் பாஸ், “நீங்கள் அனைவரும் வீட்டுக்குள் வந்திருக்கும் நோக்கம், உங்கள் அடையாளத்தை மக்களிடம் பறைசாற்றுவதற்காகதான். நீங்கள் கொண்டுவந்த உடைகள், உபகரணங்கள், காலணிகள் உள்பட உங்கள் அடையாளத்தை தொலைத்து, அதனை மீண்டும் அடைவதற்காக போராடப் போகிறீர்கள்” எனத் தெரிவிக்கிறார்.
அனைத்து போட்டியாளர்களும் தங்களின் உடைகள், காலணிகள் என அனைத்தையும் பெட்டிகளில் அடைத்து ஸ்டோர் ரூமில் வைக்கிறார்கள்.
கொடுக்கப்படும் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே அவர்களின் உடமைகள் வழங்கப்படும் எனத் தெரிகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.