சொகுசுக் காருடன் இயக்குநர் அபிஷன் ஜீவிந், தயாரிப்பாளர் மகேஷ்  படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு சொகுசுக் கார் பரிசு!

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு வந்த திருமணப் பரிசு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு தயாரிப்பு நிறுவனம் சொகுசுக் காரை பரிசளித்துள்ளது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே 1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் தயாரித்த இப்படம் பிரபலங்கள் மத்தியில் மட்டுமின்றி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படத்தில் இயக்குநர் அபிஷனும் சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது நாயகனாக நடித்து வருகிறார்.

இதனிடையே டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு தயாரிப்பு நிறுவனம் பிஎம்டபிள்யூ காரை பரிசளித்துள்ளது.

அக்டோபர் 31-ம் தேதி அபிஷன் ஜீவிந்திற்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அவருக்கு சொகுசுக் காரை தயாரிப்பாளர் மகேஷ் பரிசளித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களையும் விடியோவும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. ரசிகர்கள் பலர் தயாரிப்பு நிறுவனத்தின் செயலுக்கும் அபிஷனின் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 9: வைல்ட் கார்டு போட்டியாளர் திவ்யா கணேசன்!

BMW car gift for Tourist Family director

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்!

தங்கம் - வெள்ளி விலை சற்று குறைவு!

பணம் பேசும் வசனங்கள்... காந்தி டாக்ஸ் - திரை விமர்சனம்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!

Dinamani வார ராசிபலன்! | பிப்.1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT