இயக்குநர் பா. ரஞ்சித் படம் - இன்ஸ்டா
செய்திகள்

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!

நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி மற்றும் போலி தேர்வு அழைப்புகள் விடுக்கப்படுவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான தேர்வு அழைப்புகள் விடுக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

“மெட்ராஸ்”, “கபாலி”, “காலா” போன்ற வெற்றி படங்களின் இயக்குநர் பா. ரஞ்சித் “நீலம்” எனும் பெயரில் பல்வேறு அமைப்புகளையும் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில், நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் சிலர் போலியான தேர்வு அழைப்புகள் (காஸ்டிங் கால்) விடுத்து பணம் பறிக்க முயற்சிப்பதாகவும்; இதனால், கலைஞர்கள் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, நீலம் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்:

“நீலம் என்ற பெயரில் சில தனிப்பட்ட நபர்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத குழுக்கள் போலி காஸ்டிங் கால் மற்றும் ஆடிஷன் அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.

எங்களது நிறுவனம் எந்தவொரு ஆடிஷன் அல்லது காஸ்டிங் வாய்ப்பிற்காகவும் பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது எந்தவொரு வகையான கட்டணத்தையும் கோருவதில்லை என்பதை தெளிவாகத் தெரிவிக்கிறோம்.

அதிகாரப்பூர்வமான அனைத்து காஸ்டிங் அறிவிப்புகள் மற்றும் புதுப்பிப்புகள் எங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களின் வழியே மட்டுமே வெளியிடப்படும்.

அனைவரும் எச்சரிக்கையாக இருந்து எந்த தகவலையும் நம்பும் முன் சரிபார்த்து, எங்கள் பெயரில் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான செயல்களை உடனடியாக புகாரளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பிக் பாஸ் 9: வைல்ட் கார்டு போட்டியாளர் திவ்யா கணேசன்!

It has been alleged that fake casting calls are being made in the name of director P. Ranjith's Neelam company and organizations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani வார ராசிபலன்! | பிப்.1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

சுக்கிர தோஷம் நீக்கும் ஸ்ரீரங்கம்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைய பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்: அமைச்சர் கே.என். நேரு

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம்: மத்திய அமைச்சர் தகவல்

இப்படியொரு சம்பவம் நடந்தால்... லாக்டவுன் - திரை விமர்சனம்!

SCROLL FOR NEXT