காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு இந்திய சினிமாவின் வணிகம் உலகளவில் விரிந்து வருகிறது. பாகுபலி திரைப்படம் முதல் பான் இந்திய வெளியீடாக பிரம்மாண்டமான வசூலைச் செய்து நம்பிக்கை அளித்ததால் பல தயாரிப்பாளர்களும் அதிக பட்ஜெட்டில் திரைப்படங்களைத் தயாரிக்க முன்வந்தனர்.
அப்படி, கடந்த 5 ஆண்டுகளில் பான் இந்திய சினிமாக்களின் கையே அதிகம் ஓங்கியிருக்கிறது. நிறைய ரூ. 1000 கோடி வசூல் படங்கள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன.
தற்போது, அதிகம் வசூலித்த திரைப்படங்கள் பட்டியலில் காந்தாரா சாப்டர் - 1 இடம் பிடித்துள்ளது. இப்படம் இதுவரை ரூ. 800 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இதனால், அதிகம் வசூலித்த 12-வது இந்தியப் படம் என்கிற பெருமையும் காந்தாரா - 1-க்குக் கிடைத்திருக்கிறது.
முதல் இடத்தை ஆமீர் கானின் தங்கல் (ரூ. 2050 கோடி) பிடித்திருக்கிறது.
2. பாகுபலி - 2 (ரூ. 1764 கோடி)
3. புஷ்பா - 2 (ரூ. 1640 கோடி)
4. ஆர்ஆர்ஆர் (ரூ. 1250 கோடி)
5. கேஜிஎஃப் - 2 (ரூ. 1176 கோடி)
6. ஜவான் (ரூ. 1142 கோடி)
7. பதான் (ரூ. 1040 கோடி)
8. கல்கி ஏடி 2938 (ரூ. 1019 கோடி)
9. அனிமல் (ரூ. 921 கோடி)
10. பஜ்ரங்கி பைஜான் (ரூ. 911 கோடி)
11. சீக்ரட் சூப்பர்ஸ்டார் (ரூ. 891 கோடி)
இதையும் படிக்க: கதை திருடப்பட்டதா? சக்தித் திருமகன் இயக்குநர் விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.