லோகா, காந்தாரா சாப்டர் - 1 படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கர்நாடகத்தின் தொன்மம், கடவுள், நில அரசியலை மையமாக வைத்து உருவாகிய காந்தாரா படம் 2022-இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் முன்னோக்கிய கதையாக சாப்டர் 1 என்ற பெயரில் இந்தப் படம் அக்.2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பான் இந்திய வெளியீடான காந்தாரா, இதுவரை ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, இந்தாண்டின் பெரிய வணிக வெற்றியைப் பெற்ற படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் 1, இன்று(அக். 31) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான ’லோகா சேப்டர் 1: சந்திரா’ படம் கடந்த ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் சூப்பர் வுமன் கதையாக உருவான இந்தப் படத்தில் முன்னணி பாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார்.
லோகா திரைப்படம், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.