மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி நடித்துள்ள “பேபி கேர்ள்” திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் நிவின் பாலி - இயக்குநர் அருண் வர்மா ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பேபி கேர்ள்”. இப்படத்தின், முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டரை ஓணம் பண்டிகையை முன்னிட்டு படக்குழுவினர் இன்று (செப்.5) வெளியிட்டுள்ளனர்.
பிரேமலு திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சங்கீத் பிரதாப், ஜெய் பீம் நடிகை லிஜோமோல் ஜோஸ், அபிமன்யூ திலகன் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பேபி கேர்ள் படத்தின் போஸ்டரை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் நிவின் பாலி, ”அவளது அழுகை ஒரு புயலைப் பற்றவைக்கும், அவளது இதயத் துடிப்பு விதியை மாற்றும், எங்கள் பேபி கேர்ள் இந்த மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பார்வையின் மூலம் முதல் அடி எடுத்து வைக்கின்றாள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இயக்குநர் ராமின் இயக்கத்தில் உருவான “ஏழு கடல் ஏழு மலை” எனும் படத்தில் நடிகர்கள் சூரி, நிவின் பாலி ஆகியோர் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு: லோகா படத்தைப் பாராட்டிய ஆலியா பட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.