பிரபல மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனிக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது.
யார் மணமகன் என்பதைக் குறிப்பிடாமல் அவர் பதிவிட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த கிரேஸ் ஆண்டனி (28 வயது) மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங் எனும் படத்தில் அறிமுகமானார்.
ஃபகத் ஃபாசில் மனைவியாக கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். ஹலால் லவ் ஸ்டோரி, தமாஸா, அப்பன், நுணக்குழி படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவர் பறந்து போ எனும் தமிழ்ப் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தனக்கு கூட்டமில்லாமல், லைட்டுகள் இல்லாமல், சப்தமில்லாமல் திருமணம் நடைபெற்றதாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
யாரைத் திருமணம் செய்துள்ளார் என்பது குறித்து குறிப்பிடவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளார்கள்.
ஏற்கெனவே, நடிகை சுனைனா தனது கணவரின் புகைப்படத்தைக் காண்பிக்காமல் நிச்சயதார்த்தம் நடைபெற்றதைக் கூறியிருந்தார்.
தங்களது இணையர்களைக் காண்பிக்காமல் திருமணத்தை அறிவிக்கும் வழக்கம் பிரபலங்களுக்கு இடையே அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.