செய்திகள்

முதல்வர் படத்தில் பார்த்திபன்!

நடிகர் பார்த்திபனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பார்த்திபனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். நான் தான் சிஎம் என்ற படத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.

படத்தின் அறிவிப்பு குறித்த பதிவில்,

பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபிறகு போடப் போகும் முதல் கையெழுத்து, எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் சிங்காரவேலன் என்கிற பெயரில், சோத்துக் கட்சி என்ற கட்சியில் படகு சின்னத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

படத்தின் தலைப்பு அறிவிப்புக்கு முன்னதாகவே, அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப் போவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிக்க: கூலியில் நடித்தது தவறு... ஆமிர் கான் சொன்னது உண்மையா?

Parthiban's New Movie poster goes viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

நெல் ஈரப்பத அளவு: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

நாக் அவுட் போட்டியில் சாதனை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

SCROLL FOR NEXT