முகப்பு
செய்திகள்

மார்ஷல் படப்பிடிப்பு எப்போது?

கார்த்தியின் மார்ஷல் படப்பிடிப்பு குறித்து...

Updated On : 14 செப்டம்பர், 2025 at 9:06 AM
பகிர்:

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள மார்ஷல் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அடுத்ததாக, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையே, டாணாக்காரன் படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குநர் தமிழ், கார்த்தியின் 29-வது படத்தை இயக்கவுள்ளதாக ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

கேங்ஸ்டர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வெள்ளிக்கிழமை துவங்குவதாக இருந்தது.

இந்த நிலையில், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வேறு படத்தில் கார்த்தி இணையலாம் என்றும் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →