நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். மிமிக்ரி கலைஞரான இவர் தீபாவளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின், நீண்ட இடைவெளிக்குப் பின் ’மாரி’ படத்தின் மூலம் பெரிய வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் பேசப்படும் நடிப்பை வழங்கினார்.
தற்போது, சில படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு தீவிர மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் உடல் எடை இழந்து மோசமான நிலைக்குச் சென்றார். ஆனால், சிகிச்சை காரணமாக நோயிலிருந்து மீண்டு, பழைய தோற்றத்திற்கு மாறினார்.
இந்த நிலையில், ரோபோ சங்கருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் நலத்திற்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. விரைவில், மருத்துவர்கள் தரப்பிலிருந்து கூறப்படலாம் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.