செய்திகள்

காந்தாரா சாப்டர் 1 - டிரைலர் அறிவிப்பு!

காந்தாரா இரண்டாம் பாகத்தின் டிரைலர் வரும் திங்கள்கிழமையில் வெளியாகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

காந்தாரா இரண்டாம் பாகத்தின் டிரைலர் வரும் திங்கள்கிழமையில் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கி, நடித்துள்ள காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா `சாப்டர் 1’-இன் டிரைலர் திங்கள்கிழமையில் (செப். 22) பகல் 12.45 மணியளவில் வெளியாகவுள்ளது.

தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான காந்தாரா. 1990-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது. முதல் பாகத்தின் மீதான வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை உலகம் முழுவதும் சுமார் 30 நாடுகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

அக்டோபர் 2 ஆம் தேதியில் வெளியாகவுள்ள காந்தாரா சேப்டர் 1 திரைப்படம், 1000 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் கதையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளைமேக்ஸில் ரிஷப் ஷெட்டி 1000 போர் வீரர்களுடன் மோதுவது போன்ற காட்சியும் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: டொவினோ தாமஸ் - நஸ்ரியாவின் புதிய படம்!

Kantara Chapter1 Trailer on Sep 22nd

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11ஆக நிறைவு!

தனுஷ் குரலில்... ரெட்ட தல முதல் பாடல்!

எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயண தேதி மாற்றம்

ரோபோ சங்கர் மறைவுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் இரங்கல்!

ஆப்கனில் பிரிட்டன் தம்பதி விடுதலை! மாதங்கள் கழித்து மனம் மாறிய தலிபான்கள்!

SCROLL FOR NEXT